சாலை ஓரம் கிடந்த பணப்பை: போலீசிடம் ஒப்படைத்த வியாபாரிக்கு குவியும் பாராட்டுகள்

Author
Fathima- inCommunity
Report
0Shares

கோவில்பட்டியில் சாலையில் கிடந்த 7 ஆயிர ரூபாய் பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வியாபாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜமீன்பேட்டை தெருவைச்சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அப்பகுதியில் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இன்று பாலமுருகன் ரெயில்வே நிலையம் செல்லும் மெயின்ரோட்டில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது, சத்தியபாமா திரையரங்கு எதிரேயுள்ள சாலை பகுதியில் ஒரு பை கீழே கிடந்துள்ளது.

இதனை பார்த்த பாலமுருகன் அந்த பையை எடுத்து அருகில் இருந்தவர்களிடம் யார் பை என்று கேட்டுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் தங்கள் பை இல்லை என்று தெரிவித்ததும், பாலமுருகன் அந்த பையை எடுத்துக்கொண்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதற்கிடையில் கூசாலிப்பட்டியை சேர்ந்த முன்னாள் இராணு வீரர் சௌந்திரபாண்டியன் என்பது மார்க்கெட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது தனது பையை தவற விட்டதாக கூறி புகார் அளிக்க வந்துள்ளார்.

இதையெடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பாலமுருகன் கொண்டு வந்த கொடுத்த பை, சௌந்திரபாண்டியன் பை என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் பையை சௌந்திரபாண்டியனிடம் ஒப்படைத்தனர். பையில் ரூ 7 ஆயிரம், வங்கி கணக்கு புத்தகம், மருந்துகள் இருந்தது குறிப்பிடதக்கது.

சாலையில் கிடந்த பையை எடுத்து வந்து காவல் நிலையத்தில் கொடுத்து, உரியவர்களிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த பாலமுருகனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.