யூ.பி.எஸ்.சி தேர்வுகளை தள்ளிவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு - மத்திய அரசு, யூ.பி.எஸ்.சி பதிலளிக்க உத்தரவு

Author
Mohan Elango- inCommunity
Report
0Shares

கொரோனா முடக்கத்தால் பல்வேறு தகுதி, போட்டி தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. கொரோனா முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்க தொடங்கியபோது இந்த தேர்வுகளும் நடத்தப்பட்டன.

நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு இருந்தபோதும் மத்திய அரசு இந்த தேர்வுகளை நடத்தி முடித்தது.

இந்நிலையில் யூ.பி.எஸ்.சி தேர்வுகள் அடுத்த மாதம் இந்தியா முழுவதும் நடக்க இருக்கிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு யூ.பி.எஸ்.சி தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கல்வியாண்டு தொடங்க வேண்டும் என்பதற்காக மற்ற தேர்வுகள் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. யூ.பி.எஸ்.சி மாதிரியான போட்டி தேர்வுகளை தள்ளிவைப்பதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது மத்திய அரசும் யூ.பி.எஸ்.சியும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.