கடலைப்பருப்பு சாப்பிட்ட 18 மாத குழந்தை பரிதாப மரணம்

Author
Fathima- inCommunity
Report
15Shares

திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் கடலைப்பருப்பு சாப்பிட்ட 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் விஜய். கூலித் தொழில் செய்யும் விஜய்க்கு தர்ஷனா எனும் 18 மாத குழந்தை இருக்கிறார்.

கடந்த திங்களன்று தர்ஷனா கடலைப் பருப்பை சாப்பிட்டுள்ளார், அப்போது எதிர்பாராதவிதமாக தொண்டையில் கடலைப்பருப்பு சிக்கிக்கொள்ளவே, மூச்சுவிட சிரமப்பட்ட குழந்தை மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்றனர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.