தொடரும் பயங்கரம்! மேலும் ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளாகி பலியானார்- தாயின் கதறல்

Author
Praveen Rajendran- inCommunity
Report
17Shares

ஹத்ராஸ் சம்பவத்தை அடுத்து மற்றொரு பெண்ணும் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்து உள்ளார்.

உ.பி மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை அந்த கிராமத்தை சேர்ந்த உயர்சாதி ஆண்கள் கடுமையாக தாக்கி வன்கொடுமை செய்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதில் தொடர்புடைய 4 ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த் சம்பவத்தின் வெப்பம் தணிவதற்குள் இதேபோன்ற மற்றொரு சம்பவம் உத்தரபிரதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உ.பி யின் பால்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயது தலித் பெண் ஒருவர் புதன்கிழமை மாலை வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார்.

மேலும் இரண்டு ஆண்கள் அவரை துன்புறுத்தியதாக செய்ததாக அந்த பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்தனர்.

லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொது அந்த பெண் உயிரிழந்துவிட்டார்.

இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். அந்த பெண் காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறி உள்ளார்.