உயிருடன் சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்!

Author
Nalini- inCommunity
Report
0Shares

சேலத்தில் உயிருடன் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் 78 வயதான பாலசுப்ரமணியகுமாரை அவரது தம்பி சரவணன்(70) கை கால்களை கட்டி குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்துள்ளார். இதனால் முதியவர் பாலசுப்ரமணியகுமார் உயிருடன் துடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது சவப்பெட்டியை எடுத்து செல்ல வந்தவர்கள் முதியவர் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம், பக்கத்தினர் சொல்ல, பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் முதியவர் பாலசுப்ரமணியகுமார் சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பாலசுப்ரமணியகுமாரின் தம்பி சரவணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும சூழ்நிலையில் முதியவர் தற்போது இறந்துள்ளார்.