இரவில் போர்வை விற்க சென்ற வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Author
Praveen Rajendran- inCommunity
Report
0Shares

திருப்பூர் மாவட்டத்தில் இரவில் பெட்ஷீட் விற்க சென்ற இடத்தில் வியாபாரியை மிரட்டி இளம்பெண் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் நாட்ராயன், சொந்தமாக விசைத்தறி வைத்து போர்வைகளை தயாரித்து வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்ராயனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது.

அந்த பெண் தனது உறவினர்கள் துணி வியாபாரம் செய்வதால் அதிகளவு போர்வைகள் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் மொத்த வியாபாரம் கிடைத்த சந்தோஷத்தில் இரவு 8 மணியளவில் தனது உறவினர் குமாருடன் அந்த பெண் கொடுத்த ஆண்டிபாளையம் முகவரிக்கு சென்றுள்ளார்,

அங்கு அவர்களை வீட்டிற்குள் அழைத்த பெண்ணுடன் நான்கு பேர் சேர்ந்து கொண்டு, நாட்ராயன் மற்றும் குமார் இருவரையும் மிரட்டி செல்போன், நகை மற்றும் பணத்தை பறித்தனர்.

அதுமட்டுமின்றி நாட்ராயனை நிர்வாணப்படுத்தி அந்த பெண்ணுடன் இணைத்து வீடியோ எடுத்து மேலும் அவரிடம் 3 லட்சம் ருபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் நாட்ராயன் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார், இதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சம்மந்தப்பட்ட 5 பேரை கைது செய்தனர்.

இதில் கவிதா என்பவர்தான் முக்கியமாவனவர் என்று தெரிகிறது.. அவருக்கு இன்னொரு பெயர் வெண்ணிலா வயசு 27 ஆகிறது. அவினாசி பகுதியை சேர்ந்தவர்.மேலும் அவருடன் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிபாண்டி, திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கிமுத்து, ஜெபராஜ், சின்னதுரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.