மதுரையில் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்ட போலீசார்

Author
Praveen Rajendran- inCommunity
Report
0Shares

மதுரையில் ராஜேஷ் கண்ணன் என்ற போலீஸ் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன்(33), விருதுநகர் மாவட்டம் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி இளமதி(28), இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன, இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த ராஜேஷ் கண்ணன் தனது சொந்த ஊரான குலமங்கலத்துக்கு வந்ததுடன், விஷமருந்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து ராஜேஷ் கண்ணனை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்த போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.