முத்தையா முரளிதரன் திரைப்பட பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் - அமைச்சர் கடம்பூர் செ . ராஜூ

Author
Nalini- inCommunity
Report
0Shares

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திரைப்பட பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று அமைச்சர் கடம்பூர் செ . ராஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் கடம்பூர் சே.ராஜூ பேசியதாவது -

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திரைப்பட பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

பல விஷயங்களில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் ஹிந்தியில் பேசியதை பெருமையாக பேசியவர் கருணாநிதி மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஹிந்தி கற்று கொடுக்கப் படுகிறது.

அப்பள்ளிகளில் இடம் பெற திமுக எம்.பி.கள் டோக்கன் பெறுகின்றனர். உண்மையாக‌ இவர்கள் ஹிந்தியை எதிர்த்தால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பெற்ற இடங்களை திரும்ப ஒப்படைத்து இருந்தால் திமுக தமிழ் உணர்வை பாராட்டலாம். அதிலும் இரட்டை வேடம். திமுகவினர் நடத்தும் பள்ளிகளிலும் ஹிந்தி பயிற்றுவிக்கப்படுகிறது.

நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, காவிரி நீர் பிரச்சினை, நெய்வேலி என்.எல்.சி பங்கு விற்பனை என பலவற்றிலும் திமுக இரட்டை வேடம் தான் தமிழர்களின் பண்பாடு ஜல்லிக்கட்டை மீட்டது. மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டு வந்தது அதிமுக தமிழர்களின் உரிமைகள், லட்சியங்கள் அனைத்தையும் காவு கொடுத்தது திமுக ஆட்சி சர்க்காரியா கமிஷன் வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி கச்சதீவை தாரை வார்த்தார்.

எந்த பிரச்சினையிலும் திமுக இரட்டை வேடம் போடும் என்பது நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி உள்ளது தமிழர்களின் உணர்வுகளை காக்கின்ற இயக்கம் அதிமுக நீட் தேர்வு கட்டயம் என்ற நிலை வந்தவுடன் ,அரசு மாணவர்களை தயார் படுத்த புதிய பாடத்திட்டம், பயிற்சி வகுப்புகள் நடத்தியது இந்தியாவில் தமிழகத்தினை சேர்ந்த அரசு பள்ளி மாணவன் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டை இந்தாண்டு 10சதவீதம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் தன்னிச்சையாக துணை வேந்தர் செயல்பாடுவதாக கடிதம் எழுதி உள்ளோம், இந்த நடவடிக்கையை வேறு வழியில்லாமல் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தின் உரிமைகளை விட்டு தரமாட்டோம், உறவுக்கு கை கொடுப்போம் ,‌உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று எம்.ஜீ.ஆர். ஜெயலலிதா வழியில் இந்த ஆட்சி நடைபெறுகின்றது என்று பேசினார்.