தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்: இரவில் நடந்த துயர சம்பவம்

Author
Praveen Rajendran- inCommunity
Report
14761Shares

சங்ககிரியில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து 4 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி அருகே மாவெலிபாளையம் அன்னைநகரை சேர்ந்தவர் சிவா(26). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியை சேர்ந்த சுகன்யா(21) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது

மேலும் சுகன்யா 4 மாத கர்பமாக இருந்துள்ளார், இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு சுகன்யாவுக்கும் அவரது மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் கோவித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் சிவா வையப்பமலைக்கு சென்று தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துவந்துள்ளார்.

அதன் பிறகு நேற்று எப்பொழுதும் போல சிவா லாரி டயர் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அதன் பிறகு மிகுந்த மனஉளைச்சலில் வீட்டில் இருந்த சுகன்யா மனா வேதனை தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.