இடியாப்பத்தால் ஏற்பட்ட தகராறு...மதுரையில் பரபரப்பு

Author
Praveen Rajendran- inCommunity
Report
480Shares

இடியாப்பத்துக்கு குருமா கேட்டதற்காக 3 பேரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் பின் மோதலாக மாறி ஒருவர் படுகாயமடைந்தார்.

மதுரை பி.டி ராஜன் ரோட்டில் சப்பாத்தி கார்னெர் என்ற கடை உள்ளது, அதன் அருகே பர்மா இடியாப்ப கடை இயங்கிவந்துள்ளது.

அந்த கடையில் சிவா என்பவர் வேலை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் பர்மா இடியாப்ப கடைக்கு ஒருவர் இடியப்பம் வாங்க வந்துள்ளார்.

அப்போது வழக்கமாக இடியாப்பத்திற்கு தேங்கா பால் தருவது தான் வழக்கம் ஆனால் கஸ்டமர் குருமா வேண்டும் என கேட்டுள்ளார்.

கஸ்டமர் குருமா கேட்டதற்காக சிவா பக்கத்து கடையான சப்பாத்தி கார்னெர் கடைக்கு சென்று குருமா கேட்டுள்ளார். அப்போது அந்த கடையில் வேலை ராஜ்குமார் சும்மா குருமாலாம் தரமுடியாது என கூறியுள்ளார்,

அதன் பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது சிவா தனது சக ஊழியர் சரவணனுடன் சேர்ந்து ராஜ்குமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன்படி சிவா மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்த போலீசார் பின் ஜாமினில் விடுவித்தனர்.

மதுரையில் ஒரு இடியாப்பத்துக்கு இவளோ பெரிய சம்பவம் நடந்துள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.