தம்பியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற அண்ணன்

Author
Praveen Rajendran- inCommunity
Report
2127Shares

மதுரையில் கிரிக்கெட் விவகாரத்தால் தனது சொந்த தம்பி என்றும் பாராமல் அண்ணன் இரவில் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் செங்குளம் பகுதியை சேர்ந்தவர் மருதன், ஓய்வு பெட்ரா ஆசிரியரான இவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவி இறந்துவிட்டார்.

இவரது இரண்டாவது மனைவி பிச்சையம்மாள், இவர்களுக்கு மூறு மகன்கள் பாண்டியராஜன், சின்னத்துரை மற்றும் தினேஷ். இதில் பாண்டியராஜன் என்ஜினீயராக உள்ளார்.

தினேஷ் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீரிங் 4ம் ஆண்டு படித்து வந்துள்ளார், தினேஷ் மற்றும் பாண்டியராஜன் இடையே கிரிக்கெட் விளையாடும்போது அடிக்கடி தகராறு ஏற்படும், பின்னர் அவர்களது பெற்றோர் இருவரையும் சமாதானப்படுத்துவர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்தார் தினேஷ் அப்போது இரவு உணவை உண்டுவிட்டு மடியில் உள்ள அறையில் உறங்க சென்றார்.

அதன்பிறகு விடிந்து நீண்ட நேரமாகியும் அறையை விட்டு அவர் வெளியே வராததால் அவரது பெற்றோர் அறைக்கு சென்று பார்த்தபோது தினேஷ் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

பின்னர் அவரை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ் ஏற்கனவே இறந்துவித்ததாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து திருமங்கலம் போலீசார் விரைந்து வந்து தினேஷ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து விசாரணையில்,

தினேஷ் இருந்த அறையில் ரத்தக்கறையுடன் ஒரு அம்மிக்கல் கிடந்துள்ளது அதே சமயம் தினேஷின் அண்ணன் பாண்டியராஜனும் காணவில்லை, இதனால் சந்தேகமடைந்த போலீசார் நேற்று மாலை பாண்டியராஜனைக் கைது செய்தனர், பின் விசாரணை செய்ததில் பாண்டியராஜன் தான் தினேஷ் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்றது தெரியவந்தது.

சொந்த தம்பி என்றும் பாராமல் அண்ணன் செய்த செயல் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.