கணவரை எரித்துக் கொன்றது ஏன்? மனைவியின் வாக்குமூலம்

Author
Fathima- inCommunity
Report
3476Shares

ஈரோட்டில் மது குடித்து விட்டு கணவன் தினமும் தகராறு செய்ததால் எரித்துக் கொன்றதாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு, வில்லரசம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகர்(வயது 40). தறி பட்டறை தொழிலாளி.

இவர் ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்ந்த லட்சுமியை, 34, மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் செய்தார். லட்சுமிக்கு, 11 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் சுதாகருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் லட்சுமிக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை நடந்தது.

கடந்த 19ம் தேதி நள்ளிரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட, சுதாகர் தூங்க சென்றார்.

சண்டை நடந்ததால் கோபத்தில் இருந்த லட்சுமி, சுதாகர் மீது பெட்ரோலை ஊற்றி, தீ பற்ற வைத்து எரித்து கொன்றார்.

பின் தானும், விஷம் அருந்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இதனையடுத்து வழக்குபதிவு செய்த வீரப்பன்சத்திரம் போலீசார் லட்சுமியிடம் வாக்குமூலம் பெற்றதில், குடிபழக்கத்துக்கு அடிமையான சுதாகர் வேலைக்கு செல்லாமல் இருந்ததுடன் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

சம்பவத்தன்றும் தகராறு செய்ததால், எனக்கு கோபமானது, இதனையடுத்து என் மகனை வெளியே அனுப்பிவிட்டு சுதாகரை எரித்துக் கொன்றேன் என தெரிவித்துள்ளார்.