மகளை பென்சிலால் குத்தி கொடுமைப்படுத்திய தாய்: புகார் அளித்த தங்கை

Author
Praveen Rajendran- inCommunity
Report
6657Shares

ஆன்லைன் வகுப்பில் கேள்விக்கு பதில் அளிக்காததால் பென்சிலால் குத்தி மகளை கொடுமைப்படுத்தும் தாயின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டு தான் இருந்தன,இதனால் வகுப்புகளை ஆன்லைனில் அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் நடத்தி வந்தனர்.ஆனால் இதனால் மாணவர்கள் பலரும் படம் புரியாமலும் பலர் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் நடந்து வருகிறது.

இதனை பெற்றோர்களும் புரிந்து கொள்ளாமல் குழந்தைகளை கஷ்டப்படுத்தி வருகின்றனர்.

மும்பையில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு 12 வயது மகள் பதிலளிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தாய் அந்த சிறுமியின் முதுகில் பென்சிலை கொண்டு குத்தியுள்ளார். அது போல் அந்த சிறுமியை பல இடங்களில் கடித்துள்ளார். 6 ஆவது படிக்கும் இந்த சிறுமி தினந்தோறும் இந்த சித்திரவதையால் அவதிப்படுகிறார்.

தனது அக்கா துன்புறுவதைப் பார்க்க இயலாத தங்கை 1098 க்கு கால் செய்து புகார் அளித்துள்ளார்,இந்த புகாரின் பேரில் அங்கு சென்ற என்ஜிஓ அதிகாரிகள் அங்கு சென்று அந்த தாயிடம் கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு பதில் சொல்லாமல் அந்த பெண் நின்றுள்ளார்.இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.