வெங்காயம் திருட்டு: விலை உயர்வால் ரூ.2.35 லட்சம் மதிப்புள்ள வெங்காய மூட்டைகளை பதுக்கிய 4 பேர் கைது

Author
Nalini- inCommunity
Report
528Shares

புனேவில் விவசாயியிடம் இருந்து ரூ.2.35 லட்சம் மதிப்பிலான 58 வெங்காய மூட்டைகளைத் திருடிய வழக்கில் நான்கு பேர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனேவில் வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகள் கடந்த 21-ம் தேதி திருடப்பட்டது. இது குறித்து விவசாயி ஒருவர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நான்கு பேரை கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 49 வெங்காய மூட்டைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 9 வெங்காய மூட்டைகளை திருடர்கள் விற்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

வெங்காயம் அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காய வரத்துக் குறைந்துள்ளது. இதனால் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் சில்லறை விற்பனையில் ரூ.100 தொட்டுவிட்ட வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது ரூ.100-க்குக் குறைவாக வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.