வேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி

Author
Praveen Rajendran- inCommunity
Report
111823Shares

குகைக்குள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விதவைப் பெண்ணின் சடலம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்து கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு(42) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன் மற்றும் மகள்கள் உள்ளன.அன்பு கட்டிட தொழிலாளி என்பதால் பல இடங்களில் வேலை செய்துள்ளார் அப்போது இவருக்கு கரகம்பத்தூரை சேர்ந்த வத்சலா(55) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது,மேலும் வத்சலா கணவனை இழந்த விதவைப்பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருவரும் பலமுறை பல இடங்களில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த 7ம் தேதி முதல் வத்சலாவைக் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்,

அப்போதுதான், வள்ளிமலை மலை மீதுள்ள சமணர் குகையின் அருகே ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அந்த சடலம் காணாமல் போன வத்சலாவின் உடல் என்பதும் அவருக்கு வயது 55 எனவும் தெரிவித்தனர்.தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் இதில் அன்பு சம்மந்தப்பட்டதை கண்டறிந்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது போலீசாருக்கு பல தகவல்கள் கிடைத்தது.அதில்,

கடந்த 7 ம் தேதி வத்சலாவை வள்ளிமலைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார் அப்போது வத்சலா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அன்புவைக் கட்டாயப்படுத்தியுள்ளார் இதனால் விதவைப் பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்றதாக மேஸ்திரி அன்பு வாக்குமூலம் அளித்தார்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து, மேல்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து அன்புவை கைது செய்தனர்.வத்சலாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அந்த மலை மேலேயே போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.

கள்ளக்காதல் விவகாரத்தில் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் வேலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.