தேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்

Author
Praveen Rajendran- inCommunity
Report
6279Shares

ஆவடி அருகே தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி அக்கா,தன்னை இருவரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை அடுத்து பொத்தூர் கருமாரியம்மன் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி லாரி டிரைவர். இவருடைய மகள் ரதிமீனா (வயது 13). இவர், பொத்தூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அரசினர் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

தட்சிணாமூர்த்தியின் தம்பி சின்னதுரை. கட்டிட மேஸ்திரியான இவருடைய மகள் காயத்ரி (15). இவரும் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.அண்ணன்-தம்பி இருவரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் தான் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு வீட்டை ஒட்டிய படியே சுமார் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.அந்த நிலத்தில் அங்கங்கே வெட்டி எடுக்கப்பட்டதில் பிளான் ஏற்பட்டுள்ளது சமீபத்தில் மழை பெய்த காரணத்தினால் அந்த பள்ளங்களில் நீர் தேங்கி குட்டைபோல் ஆகியுள்ளது.இந்த நிலையில் அக்கா-தங்கை இருவரும் நேற்று விளையாடி விட்டு கை கால்களை கழுவுவதற்காக அருகில் பள்ளத்தில் குட்டைபோல் தேங்கி நின்ற தண்ணீரில் கை, கால்களை கழுவ முயன்றனர்.

இதில் எதிர்பாராத விதமாக இருவரும் அந்த நீர் தேங்கிய குட்டைக்குள் விழுந்துள்ளனர் அதில் ஆழம் அதிமாக இருந்ததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.