மாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்

Author
Praveen Rajendran- inCommunity
Report
7268Shares

மாமியார்-மருமகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மருமகள் மாமியாரைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக் இவரது மனைவி நிகிதா இருவரும் அஹமதாபாதில் தந்தை ராம் நிவாஸ் தாய் ரேகா ஆகியோருடன் வசித்து வந்துள்ளனர்.தற்போது ரேம் நிவாஸ் அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.மேலும் மாமியார்-மருமகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதும் வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபக் வேலைக்கு சென்றுவிட்டார் அந்த சமயத்தில் ரேகா மற்றும் நிகிதா இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.அப்போது நான்கு மத கர்ப்பிணியான நிகிதாவை பார்த்து ரேகா "உனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு காரணம் எனது கணவர் தான் போயும் போயும் மாமனாருடன் தகாத உறவு வைத்துள்ளயே" என கேட்டுள்ளார்.

இதனைக் கேட்ட நிகிதா அதிர்ச்சியடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போது ஆத்திரமடைந்த நிகிதா அருகில் இருந்த இரும்பு ராடால் ரேகாவின் தலையில் அடித்துள்ளார் அப்போது ரத்த வெள்ளத்தில் மிதந்த ரேகா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.பின்னர் அந்த உடலை தீவைத்து எரித்துள்ளார் நிகிதா.

முன்னதாக வீட்டில் சண்டையின் பொது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீபக்கின் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார் தீபக்கின் தனத்தை இதுபற்றி தனது மகனிடம் சொல்ல அவர் நிகிதாவிற்கு போன் செய்து விசாரித்துள்ளார் அப்போது தனக்கும் ரேகாவுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் அப்போது ரேகா தன்னை தாக்கியதாகவும் நிகிதா தெரிவித்தார்.

இதனால் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார் தீபக். வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடித்தால் யாரும் கதவை திறக்கவில்லை. அப்போது நிகிதாவுக்கு தீபக் போன் செய்தார். தனது அறையின் கதவு வெளிப்புறமாக லாக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துவிட்டார்.

அதன் பிறகு பால்கனி வழியாக உள்ளே சென்ற தீபக் அங்கு பாதி எறிந்த நிலையில் இருந்த தாயின் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது பற்றி நிகிதாவிடம் கேட்டுள்ளார் அவரோ நான் இதை செய்யவில்லை என கூறியுள்ளார்.ஆனாலும் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்

அப்போது கொலையை செய்ததை ஒப்புக்கொண்ட நிகிதா மோதலின் போது இரும்பு கம்பியால் ரேகாவை தாக்கியதாகவும் அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தபோது ரத்தக்கறையை துணியைக் கொண்டு துடைத்துவிட்டு பின் உடலை எரித்ததாகவும் நிகிதா வாக்குமூலம் அளித்தார்.