திருச்சியில் லேப் டாப் வாங்கச்சென்ற மாணவி மாயம்

Author
Praveen Rajendran- inCommunity
Report
55200Shares

திருச்சியில் லேப் டாப் வாங்கச்சென்ற மாணவி வீடு திரும்பாதது குறித்து போலீசில் அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.

திருச்சி பெரியக்கடை வீதி அரபிக் குலத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(46).இவரது மகள் கீர்த்தனா(19) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லேப் டாப் வாங்கி வருவதாக வெளியே சென்ற கீர்த்தனா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கீர்த்தனா கிடைக்கவில்லை.

இதனால் கீர்த்தனாவின் தந்தை கார்த்திகேயன் கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.இதன்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து மாயமான கீர்த்தனாவை தேடி வருகின்றார்.

You May Like This Video