கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் வென்ற ஐபிஎஸ் அதிகாரி - சர்பிரைஸ் டுவிட்

Author
Nalini- inCommunity
Report
518Shares

ஐபிஎஸ் அதிகாரி மோகிதா சர்மா நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற கேபிசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு கோடி ரூபாய் வென்றார்.

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி மோஹித் சர்மா பிரபலமான கேபிசி சீசன் 12ன் இரண்டாவது கோடீஸ்வரராகி இருக்கிறார்.

மோகிதா சர்மாவின் கணவர் ருஷால் கார்க். இவர் ஒரு இந்திய வன சேவை அதிகாரி இருக்கிறார். இருவரும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மோகிதா சர்மா இதுகுறித்து பேசுகையில், தனது கணவர் கேபிசிக்கு செல்ல விரும்புவதாகவும், கடந்த இருபது ஆண்டுகளாக அதற்காக முயற்சித்து வருவதாகவும் கூறுகிறார்.

என் கணவரின் கனவு கேபிசி-யில் சென்று விளையாடுவதுதான். அவர் 20 ஆண்டுகளாக இதற்காக முயற்சித்து வரும் நிலையில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததால் பங்கேற்றேன் என்று கூறினார். அதில் பங்கேற்றது மட்டுமின்றி வெற்றியும் பெற்றிருக்கிறேன் என்றார்.

இந்த வெற்றிக்கு பின்னர் ஒரு சுவாரஸ்யமான புகைப்படத்தை மோகிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவருக்கு மேகி, இரண்டு டேஸ்ட்மேக்கர் சாச்செட்டுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவரது ட்விட்டரில் # KBC12, 1 # மேகி பாக்கெட், 2 மசாலா சாச்செட்டுகள் கிடைத்தன. இவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கடவுள் இன்று இரக்கமுள்ளவர் என குறிப்பிட்டுள்ளார்.