கவிஞர் சினேகனுக்கு சிக்கல்! கார் மோதி விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி மரணம்

Author
Nalini- inCommunity
Report
4459Shares

மக்கள் நீதி மய்ய நிர்வாகியும், கவிஞருமான சினேகனின் கார் மோதியதில் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார்.

கடந்த 15ம் தேதி திருமயம் அருகே சவேரியார்புரத்தில் சினேகன் கார் ஓட்டி வந்தார். அப்போது அருண்பாண்டி என்ற இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது.

விபத்தில் படுகாயம் அடைந்த அருண்பாண்டி அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கவிஞர் சினேகன் மீது திருமயம் காவல்துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்த பிரிவுகளில் மாற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல், கவனக்குறைவால் வாகனத்தை இயக்கி உயிரிழப்பு ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.