மாமனார் வீட்டுக்கு செல்லும் வழியில்... மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவன்

Author
Fathima- inCommunity
Report
7385Shares

திருவாரூரில் மனைவியை துடிதுடிக்க கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூரின் வெண்ணாற்று பகுதியில் கடந்த 16ம் தேதி 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சடலத்தை கைப்பற்றிய நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், கொலை செய்யப்பட்ட பெண் அம்சகர்ணன்(வயது 46) என்பவரின் மனைவி சுதா என்பது தெரியவந்தது.

இந்நிலையில் சுதாவை கொலை செய்தது யார்? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையின் போது அம்சகர்ணனின் மீது போலீசுக்கு சந்தேகம் எழ, அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில், தன்னுடைய மனைவியான சுதாவை கொலை செய்ததை அம்சகர்ணன் ஒப்புக் கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவியான சுதாவின் நடவடிக்கைகளில் எனக்கு சந்தேகம் இருந்ததால் அடிக்கடி சண்டையிட்டேன்.

சம்பவதினத்தன்று சுதாவின் கை, கால்களை கட்டி மாமனார் வீட்டுக்கு அழைத்து சென்றேன், செல்லும் வழியில் சுதா வாக்குவாதம் செய்ததால் ஆத்திரத்தில் அடித்துக் கொன்றேன்.

யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சாக்குப்பையில் போட்டு வெண்ணாற்றில் வீசி சென்றேன் என தெரிவித்துள்ளார்.