அண்ணன் காதலித்த பெண் தம்பியுடன் ஓட்டம்: விரக்தியில் அண்ணன் செய்த காரியம்

Author
Praveen Rajendran- inCommunity
Report
7745Shares

ஒருதலையாக அண்ணன் காதலித்த பெண் தம்பியுடன் ஓடியதால் விரக்தியில் அண்ணன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு சல்லிகோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன்(26) டிப்ளமோ முடித்துள்ள இவர் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் சுப்ரவைசராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் பெரியகருப்பன் பொய்கைகரைப்பட்டியில் வசிக்கும் தனது உறவுக்கார 16 வயது பெண்ணைக் காதலிப்பதாகவும், தகுந்த பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்ட அவரது தம்பி சின்னக்கருப்பன் அந்த 16 வயது பெண்ணை காதலிக்க தொடங்கியுள்ளார்.அந்த பெண்ணும் இவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சின்னக்கருப்பன் மற்றும் அந்த சிறுமி வீட்டைவிட்டு ஒட்டியுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த அவரது அண்ணன் தான் காதலித்த பெண் தனது தம்பியுடன் ஓடிச்சென்றதை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இந்த தகவலை அறிந்த காதல் ஜோடியும் மனவேதனையில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இருவரும் மயங்கிய நிலையில், அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒரே பெண்ணை இருவரும் காதலித்து.அந்தப்பெண் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் அண்ணன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்திலும் ஏற்படுத்தியுள்ளது.