தொட்டியதில் மாயமான சிறுமியை 2 மணிநேரத்திலே மீட்ட போலீசார்

Author
Praveen Rajendran- inCommunity
Report
1010Shares

தொட்டியதில் மாயமான 8 வயது சிறுமியை 2 மணி நேரத்திலே மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருங்கூர்கை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் நேற்று காலை தனது மாணவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கரும்பு வெட்டுவதற்காக தொட்டியம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவரின் 8 வயது மகள் மஞ்சுமாதா என்ற சிறுமியை கடைவீதியில் ஓரமாக நிற்க வைத்துவிட்டு கடையில் சென்று பொருட்கள் வாங்கினார். சுமார் ½ மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை.

இது குறித்து கடைவீதியில் காவல் பணியில் இருந்த போலீசார் ராஜ்குமாரிடம் விசாரித்துள்ளார்.

இதனையடுத்து வேகமாக செயல்பட்ட ராஜ்குமார் இரண்டே மணி நேரத்தில் அந்த 8 வயது சிறுமியை கண்டுபிடித்து தொட்டியம் காவல் நிலைய போலீசார் முன்னிலையில் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

காணாமல் போன சிறுமியை விரைவாக செயல்பட்டு கண்டுபிடித்து கொடுத்த காவலர் ராஜ்குமார் அவர்களுக்கு பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.