கோவையில் பிளஸ் 1 மாணவர் மர்ம காய்ச்சலுக்கு பலி

Author
Praveen Rajendran- inCommunity
Report
973Shares

கோவை அருகே பிளஸ் 1 மாணவர் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சைபெற்று வந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் அருகே மாச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மகேஸ்வரி.இவர்களுடைய மகன் சோலைராஜன்(16) தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரஸ் தோற்று ஏற்பட்டு அவரது தொண்டை வீங்கியுள்ளது.இதனால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சோலைராஜனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் சோர்வடைந்து மயங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சோலைராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இவரது மரணம் மர்ம காய்ச்சலால் தான் நிகழ்ந்துள்ளது என தெரியவந்துள்ளது. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.