காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 நண்பர்கள் பிணமாக மீட்பு

Author
Praveen Rajendran- inCommunity
Report
1700Shares

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடையில் குளித்து கொண்டிருந்த 3 நண்பர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மலை அடிவாரத்தில் உள்ள பகுதி தான் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்கு ஒருவாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கோட்டமலையான் மகன் கோபி என்ற கோபி சங்கர் (வயது 20). பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வந்தார். இவருடைய நண்பர் லட்சுமணன் மகன் பால்பாண்டி (21). பட்டதாரியான இவர் டிரைவர் வேலை பார்த்து வந்தார். மற்றொரு நண்பர், சின்னகுட்டி மகன் முத்து ஈஸ்வரன் (22).

இவர்கள் 3 பேரும் மம்சாபுரம் பகுதியில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் அருகே பேயனாற்று ஓடைக்கு குளிக்க சென்றனர். அந்த ஓடையில் மழைநீருடன், காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து வந்தது.அப்போது அந்த 3 பெரும் எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் அடித்து செல்லப்பட்டபோது தங்களை காப்பாற்றுமாறு அலறினர்.

மேலும் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.இதையடுத்து அவர்கள்3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை அந்த ஓடையில் இருந்து சிறிது தூரத்தில் பால்பாண்டி, முத்து ஈஸ்வரன்,கோபி ஆகியோரின் உடல்கள் பாறையின் இடுக்குளில் இருந்து மீட்கப்பட்டன. தொடர்ந்து தேடும் பணி நடந்தது.

அவர்கள் 3 பேரின் உடல்களையும் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.