ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

Author
Praveen Rajendran- inCommunity
Report
2196Shares

ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆற்காடு அடுத்து சின்னகுக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி(62). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தரைமட்ட கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் இறங்கி பத்மாவதியை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பத்மாவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆற்காடு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.