மாமியார் இறந்த சில நாட்களிலே தற்கொலை செய்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர்

Author
Praveen Rajendran- inCommunity
Report
7846Shares

மாமியார் இறந்த துக்கம் தாங்காமல் ஆம்புலன்ஸ் ட்ரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார குடியிருப்பில் வசித்து வந்தவர் ரகுராமன்(52).அரசு ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மாமியார் உயிரிழந்தார். இந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் இவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து ரகுராமனின் மகன் துளசிராமன் கொடுத்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.