குடும்ப தகராறு- பட்டப்பகலில் அண்ணனை வெட்டி கொலை செய்ய அரிவாளுடன் சுற்றித் திரிந்த தம்பி

Author
Nalini- inCommunity
Report

குடும்ப தகராறு காரணமாக அண்ணனை வெட்டி கொலை செய்ய தம்பி பட்டபகலில் கத்தி அரிவாலுடன் சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அறிவானந்தம் - வனத்தாய். இவர்களுக்கு அருண், அர்ஜூனன் என்ற மகன்கள் உள்ளனர்.

அண்ணன் அருண் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அருண் செல்லூர் பகுதியில் வசித்து வருகிறார்.

தம்பி அர்ஜூனனும் கட்டத்தேவன்பட்டியில் உள்ள தனது மனைவி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அண்ணன் அருண், தனது தாய் வனத்தாயுடன் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் வனத்தாய் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

அதன்பிறகு தம்பி அர்ஜூணன், அண்ணன் அருணிடம் சண்டையிட்டு வந்திருக்கிறார். தாய் வீட்டை விட்டு வெளியேற காரணம் அருண் தான் என கூறி வந்துள்ளார் அர்ஜூனன். இந்நிலையில் அண்ணன் அருணை கொலை செய்ய தம்பி அர்ஜூனன் திட்டம் போட்டார்.

மாமனார் மொக்கத்துரை, மைத்துனன் வனராஜா, அடையாளம் தெரியாத நபர் என நான்கு பேர் பட்டாக்கத்தி, அரிவாளுடன் அருணை வெட்ட அவர் வீட்டிற்கு சென்றனர். இவர்கள் வருவதைப் பார்த்து பயந்துபோன அருண், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்தனர்.

அண்ணனை வெட்ட அரிவாளுடன் வீட்டு வாசலில் சுற்றித் திரிந்த தம்பியையும், அவன் கூட வந்த கும்பலையும் பார்த்து அச்சம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அர்ஜூனயையும், அவருடன் வந்த கும்பலையும் மடக்கி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.