கொரோனவால் பலியான மனைவி:பிறந்து 8 மாதத்திற்கு பிறகு குழந்தையைப் பார்த்த கணவன்

Author
Praveen Rajendran- inCommunity
Report

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவி பிரசவத்தின் போது உயிரிழந்தார். அவருக்கு பிறந்த குழந்தையை 8 மாதத்திற்கு பிறகு பார்த்த கணவனின் காட்சி காண்போரை நெகிழ வைத்தது.

நேபாள நாட்டில் காட்மண்டு பகுதியை சேர்ந்தவர் யுப்ராஜ் பூசல் (வயது 30). துபாயில் ஒரு தனியார் கல்லூரியில் நீச்சல் குள ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது கர்ப்பிணி மனைவி மினா சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் யுப்ராஜின் மனைவிக்கு ஜலந்தா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக உடனடியாக அவரால் நாடு திரும்ப முடியவில்லை. இதனால் இறந்த தனது மனைவியையும்.பிறந்த குழந்தையையும் பார்க்க முடியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில் சகா ஊழியர்களின் உதவியோடு நேபாளத்திற்கு வந்த யுப்ராஜ் தனது குழந்தையை 8 மாதத்திற்கு பிறகு சந்தித்தார். மேலும் அவர் காட்மண்டு பகுதியில் ஒரு குடிசையில் தனது குழந்தையோடு வசித்து வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனத்தை குழந்தையைக் கண்ட சம்பவம் காண்போரை நெகிழ வைத்தது.