குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட 43 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்

Author
Praveen Rajendran- inCommunity
Report

தனது 18 வயது மகள் இறந்ததால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் குழந்தை பிறந்து வியக்க வைத்துள்ளது.

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா ஷம்சி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா காவேரி (வயது 50). இவரது மனைவி ஷோபா காவேரி (43). இந்த தம்பதிக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதைதொடர்ந்து ஷோபா கர்ப்பமானார்.அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து ஷோபா குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்.

இந்த நிலையில் தங்களது ஒரே மகளை பாசமாக வளர்த்து வந்தனர். இந்த நிலையில் 18 வயதன அவர்களது மகள். கடந்த ஓராண்டுக்கு முன்பு ரத்த சோகைப் ப்ரசஹானாயின் காரணமாக உயிரிழந்தார்.

இதனால் சந்திரப்பா- ஷோபா தம்பதி மனம் உடைந்தனர். தாங்கள் பெற்ற ஒரு மகளும் இறந்துவிட்டாளே என வேதனையில் இருந்தனர். பின்னர் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள இருவரும் விரும்பினர். ஆனால் ஷோபா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருந்ததால், அதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் உப்பள்ளி சிட்டிகுப்பி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி டாக்டர் ஸ்ரீதர் தண்டடேயப்பன்னவரிடம் ஆலோசனை கேட்டனர். அதன் பின் அந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ஷோபா கர்ப்பமானார். இதனால் அவரது குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சிகிச்சைக்காக வந்த ஷோபா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு மீண்டும் குழந்தை பிறக்க சிகிச்சை அளித்த டாக்டர், செவிலியர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். குடும்ப கட்டுப்பாடு செய்த 43 வயது பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.