'நிவர்' புயலால் கடற்கரையில் குவிந்த தங்கம்: சூறாவளி காற்றிலும் அலைமோதிய மக்கள்

Author
Nalini- inCommunity
Report

நிவர் புயலின் தாக்கம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் மற்றும் ராயலசீமா மாவட்டங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை காக்கிநாடா அருகே உள்ள உப்படா தொரட பேட்டா ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரையில் ஒரு கிராம் மற்றும் 2 கிராம் மதிப்புள்ள தங்க மணிகள் மண்ணில் கிடந்ததை சில மீனவர்கள் கண்டெடுத்தனர். இந்த செய்தி அதன் சுற்றுப்புற கிராமங்களில் வேகமாகப் பரவியது.

இந்த செய்தியை அறிந்து நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என மீன் வலைகள், சீப்புகள் போன்றவற்றால் தங்கத்தை தேட ஆரம்பித்திருக்கின்றனர்.

கடும் சூறாவளி காற்றிலும், கன மழையிலும் குடை பிடித்தவாறு பலர் தங்க வேட்டை நடத்தினர். இதில் 4 பேருக்கு மட்டுமே சிறிதளவு தங்கம் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக அப்பகுதிகளில் புனித நீராடிய சிலர், நேர்த்திக் கடனாக சிறிய அளவு தங்கத்தை கடலில் அர்ப்பணம் செய்தனர்.

சிலர் கடலில் குளிக்கும் போது அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் தங்க நகைகள் கடலில் இருந்திருக்கலாம். அந்த நகைகள் தற்போது புயலின் காரணமாக கடல் சீற்றத்தால் மீண்டும் கரைக்கு ஒதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடற்கரையில் தங்க மணிகள் கிடைத்ததால் கடந்த 3 நாட்களாக அப்பகுதி மக்கள் இன்னமும் தங்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.