5 மாதம் வீட்டு வாடகை செலுத்ததால் வீட்டை இடித்து தள்ளிய முதலாளி

Author
Nalini- inCommunity
Report

வீட்டில் குடியிருந்தவர்கள் கடந்த 5 மாதங்களாக வீட்டு வாடகை தராததால் வீட்டின் ஓனர் வீட்டை இடித்துத் தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவை சேர்ந்த சபரிராயன் என்பவருக்கு சொந்தமாக மதுரை மண்மலைமேடு பர்மாகாலனி பகுதியில் ஒரு வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டில் பாரதிராஜா, விஜயலட்சுமி தம்பதியினர் 10 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பணிக்கு செல்லாததால் பாரதிராஜா கடந்த 5 மாதங்களாக வாடகையை செலுத்த முடியவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் சபரிராயன் தொடர்ந்து வாடகை கேட்டு வந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாரதிராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் மறுபடியும் சபரிராயன் விஜயலட்சுமியிடம் வாடகை கேட்டுள்ளார். அதற்கு விஜயலட்சுமி தற்போது தர முடியாது என கூறியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த சபரிராயன் உடன் அழைத்துச் சென்ற ஆட்களை வைத்து வீட்டை இடித்து தள்ளியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த விஜலட்சுமியின் மகன் விக்னேஸ்வரனுக்கு (13) படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அச்சிறுவனை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சபரிராயனை போலீசார் தேடிவருகின்றனர்.