நடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு? மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு

Author
Nalini- inCommunity
Report

நடிகர் சிவகுமார் கடந்த ஒரு வாரமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது, ஒரு காலத்தில் விறுவிறுவென ஏறிய பாதிப்பு எண்ணிக்கை தற்போது பல மடங்கு குறைந்து வருகிறது, உயிரிழப்பும் ஒன்றை இலக்கத்திற்கு வந்துவிட்டது.

எனினும் தொற்று முழுமையாக சரியாகவில்லை, ஆங்காங்கே வைரஸ் பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில் நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் தன்னை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரு வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அவர் நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.