வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்: கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி

Author
Praveen Rajendran- inCommunity
Report

மகன்கள் வீட்டைவிட்டு விரட்டியதால் விரக்தியில் கலெக்டர் அலுவலகம் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கொத்தரி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மை (வயது 70). இவர் நேற்று காலையில் சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தனது கையில் வைத்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனு வாங்கி கொண்டு இருந்தார். போலீசார் அவரிடம் இந்த தகவலை தெரிவித்தனர். உடனே அவர் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தார். தீக்குளிக்க முயன்ற அந்த மூதாட்டியிடம் பரிவுடன் விசாரித்தார்.

அந்த சமயத்தில் கலெக்டரிடம் தந்து புகாரை அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, எனது கணவர் குமரப்பன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு தான் எனது மகன்கள் வீட்டில் வசித்து வந்தேன். ஆனால் எனது மகன்கள் என்னை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டனர்.

அதன் பின் தற்போது 2வது மகள் சோலை அழகு வீட்டில் வசித்து வந்தேன். ஆனால் தான் தனது மகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என எண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை தொடர்ந்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உடனடியாக பள்ளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து மூதாட்டி கொடுத்த புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

பின்னர் கலெக்டர் அந்த மூதாட்டியிடம் அறிவுரை வழங்கி அவரது மகள் சோலை அழகுவிடம் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மூதாட்டியின் புகாரை நேரிலே வந்து பெற்றுக்கொண்ட கலெக்டரின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.