காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிய இளம்பெண்: விரக்தியில் வீட்டை இடித்த பெண் வீட்டார்

Author
Praveen Rajendran- inCommunity
Report

ராமநாதபுரம் மாவட்டத்தில் காதலனுடன் இளம்பெண் ஓடியதால் கோபமடைந்த பெண்வீட்டார் காதலனின் வீட்டை இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த ரம்யபிரபாவும், மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபர் குமாரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று ரம்யபிரபாவை திருமணம் செய்வதற்காக குமார் அவரால் கூட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பெண் வீட்டார் காதலனின் சொந்தக்காரர்கள் வீட்டிற்குள் புகுந்து சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 8 ஒட்டு வீடுகளை இடித்து சேதப்படுத்தியதோடு,வீட்டின் முன்பு நின்ற 4 இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் ஒரு குடிசை வீட்டுக்கு தீ வைத்து வீடு தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண் வீட்டார் 10 பேரை தற்போது தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு மோதல் ஏதும் நிகழாமல் இருக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.