பள்ளி வளாகத்தில் மாணவிக்கு தாலிகட்டிய 11ம் வகுப்பு மாணவருக்கு நேர்ந்த கதி

Author
Praveen Rajendran- inCommunity
Report

ஆந்திரா மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் சகா மாணவியான தனது காதலிக்கு 11ம் வகுப்பு மாணவன் தாளிக்காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது ஒரு விளையாட்டு பொருள் போல் ஆகிவிட்டது. நினைத்தால் காதல் இல்லையென்றால் பிரிவு. மேலும் காதல் செய்தால் பிற்காலத்தில் எப்படி வாழப்போகிறோம் அதற்கான நடைமுறைகள் என எதையும் பற்றி யோசிக்காமல் செயல்படுகிறார்கள். தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடைகளை தாண்டி திருமணத்துக்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் அரசு ஜூனியர் கல்லூரி என்றழைக்கப்படும் மேல்நிலைப்பள்ளியில் சத்தமில்லாமல் விபரீத சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். அந்த ஜூனியர் கல்லூரியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர் கொரோனா காலத்தால் நீண்ட இடைவெளியாக தனது காதலியான சகா மனைவியை பார்க்க முடியாமல் தவித்துள்ளார்.

தற்போது ஆந்திராவில் மீண்டும் பல்லில் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவர் இனியும் இந்த பிரிவு வந்துவிடக் கூடாது என எண்ணி ஒரு மஞ்சள் தாலியை அந்த பெண்ணின் கழுத்தில் கட்டியுள்ளார். இதனை சக மாணவர் ஒரு படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பெரும் சர்சையைக் கிளப்பினார்.

பள்ளி மாணவர்களின் இந்த திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி கல்லூரி முதல்வரின் பார்வைக்கு சென்ற நிலையில் விபரீத சம்பவத்தை பள்ளியின் வகுப்பு அறையில் அரங்கேற்றிய மூவரையும் பள்ளியில் இருந்து நீக்கி டி.சி.யை கையில் கொடுத்து அனுப்பினார்.

பள்ளிக்கு சென்று படிக்கச் வேண்டிய காலத்தில் இதுபோன்ற கோளாறு கொண்ட மாணவர்களின் செயல் அனைவர்க்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.