ஆபாச பேட்டிகளை வெளியீடும் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார்

Author
Praveen Rajendran- inCommunity
Report

ஆபாச பேட்டிகளை வெளியிடும் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்தது போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் யூடியூப் சேனல்கள் பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து யூடியூப் சேனலை சேர்ந்த அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். மேலும், ஏற்கெனவே பரவி வரும் ஆபாச பேட்டி வீடியோக்களை நீக்கியும் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.