அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக 2 வயது சிறுமி காளையை அழைத்து வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
இன்றைய போட்டியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர், போட்டியை காண ராகுல் காந்தி வருகை தருவார் என கூறப்பட்டது.
இப்போட்டியில் 430 மாடு பிடிவீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க உள்ளனர், மேலும் சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறங்கவுள்ளனர்.
இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் குருநாதன் என்ற கிராமத்திற்குச் சொந்தமான காளையை 2 வயது சிறுமி உதயா தைரியமாக அழைத்து வந்தார்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.