பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலே 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று

Author
Praveen Rajendran- inCommunity
Report

தமிழகத்தில் 10 மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அந்த மனைவி விடுதியில் தங்கி இருந்ததால் அவரோடு இருந்த 36 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது . மேலும் பள்ளிக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டன.