மதுரையில் கூலிப்படையை வைத்து நாயைக் கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை, செல்லூரில் வசிப்பவர் விமல்ராஜ். இவர் தெரு நாய் ஒன்றை மனித நேயம் இல்லாதமல் உருட்டுக்கட்டையால் நாயின் தலையிலேயே அடித்து கொலை செய்து, பின்பு, அதனை பிளாஸ்டிக் பையில் கட்டி தூக்கிச் சென்று குப்பையில் வீசியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வந்தது.
இந்த சம்பவம் குறித்து,மதுரை வடக்கு வட்ட கிராம அலுவலர் முத்துமொழி செல்லூர் காவல்நிலையத்தில், விலங்குகள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார்.
இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் நாயைக் அடித்துக் கொன்றவர் செல்லூர் கண்மாய் நகரை சேர்ந்த விமல் ராஜ் என்பதும் இவரிடம் ரூ.500 கொடுத்து கொலை செய்ய சொன்னது சிவகாமி தெருவைச் சேர்ந்த முத்துசரவணன் என்பவர் எனவும் தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.