ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட எம்பி: போலீசிடம் சிக்கிய கடிதம்

Author
Nalini- inCommunity
Report

மகாராஷ்டிரா மாநில எம்.பி. மோகன் டெல்கர் தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தாத்ரா - நாகர் ஹவேலி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மோகன் டெல்கர் (58). இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். பின்னர், இவர் மக்கள் செல்வாக்கால் சுயேட்சையாக போட்டியிட்டார். போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அவர், மும்பையின் மரைன் டிரைவில் உள்ள சீ கிரீன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஹோட்டல் ஊழியர்கள் கதவை தட்டிய போது கதவு திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார்கள். அப்போது மோகன் டெல்கர் அறையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஊழியர்கள் மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோகன் சஞ்சிபாய் டெல்கர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், எப்படி தற்கொலை செய்துக்கொண்டார் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றனர்.

இதனையடுத்து, தற்கொலை செய்துக்கொண்ட அறையை போலீசார் சோதனை செய்த போது அவர் எழுதிய கடிதம் ஒன்றை போலீசிடம் சிக்கியது. தற்கொலைகான காரணம் குறித்தும், அக்கடித்தில் உள்ள தகவல்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை போலீசார் கூறமறுத்துவிட்டார்கள். கடிதம் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

58 வயதான மோகன் டெல்கர் ஏழு முறை எம்.பி.யாக இருந்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.