மத்திய அரசு ஊழியருக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் குற்றம் சாட்டப்பட்டார். இவ்வழக்கில், இவருக்கு இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வி.வி. மினரல்ஸ் வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும், லஞ்சம் கொடுக்க உதவியதாக விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 2 லட்சம் அபராதமும், மேலும், முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து சிபியை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.