நீ தான் எங்கள் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கிறாய் – மகள் குறித்து நடராஜன் நெகிழ்ச்சி டுவிட்

Author
Nalini- inCommunity
Report

நீ தான் எங்கள் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கிறாய் என்று மகள் குறித்து நடராஜன், ஹன்விகாவின் புகைப்படத்தை பதிவிட்டுநெகிழ்ச்சி டுவிட்

தமிழகத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர் முதன்முதலாக தன்னுடைய மகள் ஹன்விகாவின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளுக்காக பறந்து கொண்டே இருந்த நடராஜன் தாயகம் திரும்பியவுடன் தன்னுடைய குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு வந்தார். அப்போது அவர் தன் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் “எங்களின் சின்ன தேவதை ஹன்விகா. எங்கள் வாழ்வில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு நீ தான். நீ தான் எங்கள் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கிறாய்.

எங்களை உன் பெற்றோர்களாக தேர்வு செய்ததற்கு நன்றி லட்டு… உன்னை நேசிக்கின்றோம். என்றென்றும்” பிறந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடராஜன்.