நெருப்பில்லாமல் புகையுமா? கூடிய சீக்கிரம் கெட்டிமேளம் கொட்டுமாம்

Author
Fathima- inGossip
Report

நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையின் திருமணப் பேச்சு தான் தற்போது கோடம்பாக்கத்தில் டாக் ஆப் தி டவுண்.

ஏற்கனவே பலமுறை திருமணப் பேச்சுகள் தோல்வியில் முடிந்தது. ஒருபுறம் வயதும் கூடிக் கொண்டே போவதால் சீக்கிரமே திருமதி ஆகி விட முடிவு செய்து விட்டாராம் நடிகை.

அதனால் தான் நடிகருடன் திருமணப் பேச்சை ஆரம்பித்திருக்கிறாராம்.

சமீபத்தில் இவர்கள் சேர்ந்து நடித்த படம் கலவையான விமர்சனங்களில் சிக்கினாலும், அந்தப் படத்திற்குப் பிறகு தான் நடிகைக்கு இந்த ஐடியா வந்தது என்கிறார்கள்.

நெருப்பில்லாமல் புகையாது என்பார்களே.. அது உண்மைதான். பின்னணியில் நிஜமாகவே திருமணப் பேச்சு நடப்பதால் தான் காற்று வாக்கில் அது ஊடகங்களில் கசிந்து விட்டது என்கிறார்கள்.