பிக்பாஸ் ஆரவ்வுக்கும் நடிகை ராஹீ என்பவருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச்சென்றார் ஆரவ்.
அந்த சீசனிலேயே நடிகை ஓவியாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார், இதனால் அப்செட்டான ஓவியா பிக்பாஸை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.
சீசன் முடிந்த பின்னர் இருவரும் லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது, ஆனால் நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே ஆரவ் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் ஆரவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம். கவுதம் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்க படம் மூலம் நடிகையாகும் ராஹீ என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்.
அவர்களின் திருமணம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி சென்னையில் இருக்கும் பெரிய ஹோட்டல் ஒன்றில் நடக்கவிருக்கிறதாம்.
இதன் காரணமாகவே ஓவியா சோகமான டுவிட்களை பதிவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.