90களில் கிரிக்கெட் உலகில் எனக்கென ஒரு பாதையை வகுத்து அதில் தன்னுடைய விளையாட்டு திறமையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்திய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் தான் சச்சின் தெண்டுல்கர். இவருக்கு சாரா என்ற மகள் உள்ளார்.
இவர், இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் ஒருவரை காதலிப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாயின.
இந்தநிலையில் சாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பலருக்கு பல்வேறு விதமாக சந்தேகங்களையும், கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர் சுப்மான்கில் பீல்டிங்கின் போது டைவ் அடித்து பந்தை பிடித்தார். இந்த புகைப்படத்தை தான் சாரா சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தில் இதயம் போன்ற ஹார்ட்டு சித்திரங்களையும் பதிவிட்டிருந்தார். இதனால் சாராவும், சுப்மான்கில்லும் காதலித்து வருவதாக தகவல்கள் சகிந்துள்ளன. இதற்கு முன்பு கூட 2 முறை சாராவும், சுப்மான்கில்லும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனையடுத்து சுப்மான்கில்லின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சாரா வெளியிட்டிருப்பதால் இவர்கள் இருவருக்கும் காதல் இருக்கும் என்பதை இந்த படம் உறுதிப்படுத்தியிருப்பதாக கருத்துக்கள் நிலவி கொண்டிருக்கிறது.