குடித்துவிட்டு மது போதையில் தொல்லை? கணவரை வீட்டு விட்டு துரத்தினாரா வனிதா?

Author
Santhan- inGossip
Report

-நடிகையும், பிக்பாஸ் பிரபலமும்மான வனிதா விஜயக்குமார், கணவர் பீட்டர் பாலை வீட்டை விட்டு அடித்து துரத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகை வனிதா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து சொந்தமாக யூ டியூப் சேனல் ஆரம்பித்த நிலையில், மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து, பீட்டர் பால் என்பவரை வனிதா நான்காவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

ஒரு கட்டத்தில் இந்த விவகாரத்தில் வனிதா மற்றும் திரைப்பிரபலங்கள் சிலரும் மோசமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின் இதை சட்டப்படி பார்த்து கொள்கிறோம் என்று வனிதா கூற, இதைப் பற்றி பேச்சு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது நடிகை வனிதா, பீட்டர் பாலை வீட்டை விட்டு அடித்து துரத்திவிட்டதாக, தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம், வனிதாவும், பீட்டர் பாலும் சமீபத்தில் கோவா சென்றிருந்தனர். அங்கிருந்து திரும்பும் வழியில், வனிதாவிடம் பீட்டர் பால் தகராறில் ஈடுபட்டதால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வனிதா பீட்டர் பாலை அடித்து நொறுக்கியுள்ளார்

இதனால் கோபமடைந்த பீட்டர் பால் வீட்டிற்கு வராமல் நண்பர்களின் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். வனிதா சும்மா இல்லாமல் அங்கும் சென்று அவரை தாக்கியுள்ளார்.

இதனால் செய்வதறியாது திகைத்து கொண்டிந்த பீட்டர் பால் இப்போது அலுவலகமே கதி என வீட்டுக்கு கூட செல்லாமல், அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அலுவலகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதுவும் தனது பழைய அலுவலகம் என்பதனால் பழைய தயாரிப்பாளர் மிகவும் கடுமையாக பேசி உள்ளே அனுமதிக்க வில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.