கனடாவில் கொரோனா இரண்டாம் அலை - முன்னெச்சரிக்கையாக இருக்க பிரதமர் வேண்டுகோள்

Author
Mohan Elango- inHealth
Report
0Shares

உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட பாதிப்பு தொடங்கியிருக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது கனடாவிலும் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவும், மெக்சிகோவும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட, கனடா கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தியிருந்தது.

தற்போது வரை கனடாவில் 147,612 பாதிப்புகளும் 9,244 மரணங்களும் பதிவாகியுள்ளன. நேற்று மட்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கொரோனாவஒ எதிர்கொள்வதில் நாம் முன்பைவிட கவனமாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.