நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை எவ்வாறு உதவி புரிகின்றது?

Author
Kavitha- inHealth
Report
0Shares

சர்க்கரை நோயாளிகளுக்கு வேம்பு எவ்வாறு நன்மையளிக்கிறது என்பதை பற்றி இங்கு காணலாம்.நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த வேம்பை எடுத்துக்கொள்ளலாம்.

  • வேப்ப இலை சாறு மற்றும் விதை எண்ணெயை நான்கு வாரங்களுக்கு உட்கொண்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

  • நீரிழிவு நோய் வருவதைத் தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ வேம்பின் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • தொடர்ந்து, நோயாளிக்கு இன்சுலின் ஊசிபோடுவதைக் குறைக்க வேம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • வேம்பு டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பு அல்லது இன்சுலின் சரியாக இருக்காத நிலை உடலில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

  • மூலிகையின் இலை அக்வஸ் சாறு உடலில் குளுக்கோஸ் அளவை சமமாக வைக்க உதவுகிறது. இதனால் இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது.

நீரிழிவு நோயாளி உகந்த வேம்பு காபி தயாரிப்பது எப்படி?

  • அரை லிட்டர் தண்ணீரில், சுமார் 20 வேப்ப இலைகளை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  • இலைகள் மென்மையாகவும், தண்ணீர் கொஞ்சம் பச்சை நிறமாகவும் மாறும்போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

  • பின்னர் வடிகட்டி, அருந்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.

முக்கிய குறிப்பு

  • குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த சுகாதார நிபுணருடன் முறையான ஆலோசனையின் பின்னரே இதைச் செய்ய வேண்டும்.

  • ஏனெனில் சில தயாரிப்புகளுடன் வேம்பை எடுத்துக்கொள்ளும்போது, சில சமயங்களில் நோயாளிக்குப் பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும்