கொரோனா மறுதொற்று பற்றி கவலை வேண்டாம்: மத்திய அரசு தகவல்

Report
0Shares

கொரோனா நோயானது அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை பெரிதும் தாக்கிய போது, இந்தியாவில் அதன் தாக்கம் உச்சத்தை தொடவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவ கவுன்சில் தெரிவிக்கையில்'கொரோனா தாக்கத்தை பொறுத்தவரை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளை பெரிதும் தாக்கி உச்சத்தை எட்டி அதன் பின் தான்கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியது.

அதுவும் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் அதிக மரணங்கள் நிகழ்ந்தது.

மேலும் மார்ச் மாத காலத்தில் இருந்து இந்தியாவில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் அத்தகைய உச்சத்தை இந்தியா எட்டவில்லை. அதோடு இந்தியாவில் மறு தொற்று ஒன்று என்பது மிகவும் அரிதானது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதைப்போல, இந்தியா 38.50 லட்சத்துக்கு மேற்பட்ட குணமடைந்தவர்களை கொண்டிருப்பதாக கூறியுள்ள சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், இது உலக அளவில் அதிகமானதாகும் எனவும் தெரிவித்தார்.